Close
டிசம்பர் 25, 2024 1:25 மணி

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி..!

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற, பெரியார் நினைவேந்தல் நிகழ்ச்சியில், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நாமக்கல் :

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாளினை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், ராஜேஷ்குமார் எம்.பி. ஆலோசனைப்பட்டி, மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நாமக்கல் தெற்கு நகர திமுக செயலாளர் ராணா ஆனந்த், நாமக்கல் மேற்கு நகர செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில், தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி, திமுக நிர்வாகிகள் பொன் சித்தார்த், கிருபாகரன், ராஜவேல், முரளி, கடலரசன் கார்த்திக், ஈஸ்வரன், மூர்த்தி, அருள்செல்வன், அன்பரசு மற்றும் திரளான திமுகவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top