திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
அ.தி.மு.க. நிறுவனரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் 37-வது ஆண்டு நினைவு தினம்) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் சார்பாக புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ் ராமச்சந்திரன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன், நகர செயலாளர் செல்வம், மாவட்ட துணை செயலாளர்கள் சுனில் குமார், உஷா நாதன், ராஜா போர் மன்னன், நகர மன்ற உறுப்பினர்கள், சிவில் சீனிவாசன், சரவணன், பழனி, சந்திர பிரகாஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள் ,நகர நிர்வாகிகள், தொண்டர்கள் என பல கலந்து கொண்டனர் .
ஆரணி
ஆரணியில் எம்.ஜி.ஆரின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஆரணி பஜார் வீதியில் வைக்கப்பட்டிருந்த எம் ஜி ஆர் திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜன், நகர செயலாளர் அசோக்குமார், நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு, நகர மன்ற உறுப்பினர் சுதா குமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கர், ஜெயபிரகாஷ், நகர மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி துணைச் செயலாளர் கலைவாணி ஜோதி, உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்டத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் அமுதா அருணாச்சலம்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி, நளினி மனோகரன், மாவட்ட அவை தலைவர் நாராயணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ,கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.