Close
டிசம்பர் 26, 2024 3:46 காலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரியார் நினைவு தின நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 51 நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பெரியாரின் சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், பெரியாரின் நினைவு நாளையொட்டி திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க.  சார்பில் தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவரது திருவுருவ சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, தரணி வேந்தன்,  சட்டமன்ற உறுப்பினர் கிரி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் மற்றும் கழக முன்னோடிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஆரணி

தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி, ஆரணியில் பல்வேறு கட்சியினா் செவ்வாய்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் நகா்மன்ற தலைவா் மணி தலைமையில், முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில், தொகுதி பொறுப்பாளா் அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எம்.சுந்தா், துரைமாமது, மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதிமுக சாா்பில், மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராசன் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில், நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட பேரவை செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், மாவட்டச் செயலா் முத்து தலைமையில், முன்னாள் மாவட்டச் செயலா் ம.கு.பாஸ்கரன், நகரச் செயலா் மோ.ரமேஷ், நகர துணைச் செயலா் மோகன் உள்ளிட்டோா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top