கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ், பரிசுகளை வைக்கும் ஐதீகத்தின் தோற்றத்திற்குள் மூழ்கினால், மனதைக் கவரும் அந்த பாரம்பரியம் ஒரு வளமான வரலாற்று மரபு மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டியதில்லை. ஆனால் அதன் அழகு, இந்த கொண்டாட்ட நாளில் பன்மடங்கு அதிகரிக்கிறது. கிறிஸ்துமசுக்கு பரிசளிக்கும் வழக்கம் ஜெர்மனியில் 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என சொல்கிறார்கள். கிறிஸ்துமஸ் மரங்கள் இனிப்புகள் மற்றும் பொம்மைகளால், வாழ்த்து அட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று குழந்தைகள் அவற்றை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதிலும் விக்டோரியா மகாராணியின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் பிறந்த அவரது கணவர் இளவரசர் ஆல்பர்ட்டின் தாக்கத்தால், வின்ட்சர் கோட்டையில் கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்த போது, இந்த வழக்கம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது. விழாவின் ஒரு பகுதியாக மரத்தைச் சுற்றி அதன் கீழ் பரிசுகள் வைக்கப்பட்டன. இது படிப்படியாக, உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளுடன் கலந்து உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கமாக மாறியது. இதற்கென பிரத்தியேக காரணம் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு பரிசும் அன்பு, அக்கறை மற்றும் நல்லெண்ணத்தை குறிக்கிறது.