பெரியபாளையம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலுவிறுத்தி அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் அமணம்பாக்கம், தாமரைப்பாக்கம், வெங்கல், மாகரல், ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு வீட்டுமனை பட்டா சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.