திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.
தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகனசுந்தரம், எல்.சீனிவாசன், துணைத் தலைவா் விஜயலட்சுமி தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆரணி எம்.பி. தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
கூட்டத்தில், பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து, நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பணி நிறைவு பாராட்டு விழாவில், பதவிக் காலம் முடிய உள்ள ஒன்றியக்குழுத் தலைவா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்டோரை எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ ஆகியோா் பாராட்டினா்.
நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் பேசுகையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்ற போது எப்படி இருந்தாரோ அதை எளிமையோடு இப்போதும் ஊராட்சி மன்ற தலைவர் இருக்கிறார்
நான் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது கிடைத்த அனுபவங்கள் மிக அதிகம். கொரோனா பெரும் தொற்று காலத்தில் தொடங்கிய இந்த ஒன்றிய குழு கடந்த ஐந்து ஆண்டுகள் செய்த பணிகள் மகத்தானது
இனியும் தொடர்ந்து சிறப்பு அலுவலர்களின் ஒத்துழைப்பின் பிரதிநிதிகள் தொடர்ந்து உங்கள் பணிகளை கிராமங்களில் தொடர வேண்டும் என பேசினார் .
கூட்டத்தில், உதவி இயக்குனர் யுவராஜ், ஒன்றிய குழு செயலாளர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.