Close
ஜனவரி 10, 2025 7:32 காலை

ரத்தன் டாடா பிறந்த நாளை முன்னிட்டு வண்ண நூலில் அவரது உருவம்: கோவை பெண் உருவாக்கியுள்ளார்

“உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!” – இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலக சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் நாவல் டாடா.

உலக சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்ததை ஏற்படுத்திக் கொடுத்ததிலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் டாடா குழுமத்தின் பங்கும், ரத்தன் டாடாவின் பங்கும் அளப்பறியது.

பத்மபூஷன் திரு ரத்தன் டாடா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில் அன்னாரது உருவ படத்தை வண்ண நூலில் இரண்டு அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் உள்ள காடா துணியில் கோவை பெண் ஒருவர் உருவாக்கியுள்ளார்

கோவை நல்லூர் வயல் சிறுவாணி சாலையில் உள்ள சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளியில் விடுதிக்காப்பாளராக பணிபுரிந்து வரும் ரேவதி சௌந்தரராஜன் இந்த படத்தை உருவாகியுள்ளார்

இது குறித்து அவர் கூறுகையில், திரு. ரத்தன் டாடா அவர்கள் தொழில் அதிபர் மட்டுமல்லாது மிகவும் எளிமையானவர் பல சமூக சேவைகளை செய்து ஏழை எளியவர்களுக்கு உதவிய மாமனிதர். அன்னாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஓவியத்தை நான் சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top