Close
ஜனவரி 10, 2025 12:53 மணி

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ..!

ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரியேரி ஊராட்சியில் ரூபாய் 30 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர்  திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பத், நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

அப்போது எம்பி பேசுகையில் ;

இந்த ஊராட்சியில் நாங்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது என்னிடம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இடமும் ஒன்றிய குழு தலைவர் சுந்தர பாண்டியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி ஆகியோர் எங்களிடம் கோரிக்கை வைத்தனர் .அந்த கோரிக்கையின் அடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 30 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை கட்டி இப்போது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஊராட்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் சலுகைகளும் வழங்குவதற்கு சட்டமன்ற உறுப்பினரும் நானும் என்றும் தயாராக உள்ளோம் என எம்பி கூறினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், அரசு ஒப்பந்த காரர்கள், பொறியாளர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் ,ஒன்றிய கவுன்சிலர்கள் ,அரசு அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top