காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் அருகே அமைந்துள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்..
கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் திவ்ய தேசங்களும் பரிகார தலங்களும் அமைந்துள்ளது.
அவ்வகையில் சின்ன காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கிழக்கு மாடவீதியில் அமைந்துள்ளது பக்த ஆஞ்சநேயா ஆலயம்.
இங்கு 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் மூலவர் அமைக்கப்பட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி காலை 8 மணிக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர் மற்றும் பழவகைகள் உள்ளிட்ட 20 வகையிலான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்பு துளசி மாலை பஞ்சவர்ணமாலை மற்றும் வடமாலை உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்று திருக்கோயில் சன்னதியில் திருவிளக்கு ஏற்றி பெண்கள் வழிபட்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதேபோல் தேரடி பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய பிரமுகர்கள் , பக்தர்கள் என பலர் சாமி தரிசனம் மேற்கொண்டனர்