Close
ஜனவரி 10, 2025 8:23 காலை

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 500 பேர் கைது..!

அண்ணா பல்கலை மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அதிமுக சார்பில், ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

நாமக்கல் :

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, ராசிபுரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் தங்கமணி, எம்எல்ஏ, போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டத்தில் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து பஸ்சில் அழைத்துச் சென்றனர்.

முன்னாள் அமைச்சர் டாக்டர் ஸ்.சரோஜா, மாவட்ட அதிமுக வர்த்தக பிரிவு செயலாளர் ராகா தமிழ் மணி, திருச்செங்கோடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன் சரஸ்வதி, ராசிபுரம் நகர அதிமுக செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மயில்சுந்தரம் உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top