Close
ஜனவரி 9, 2025 6:36 மணி

திருவண்ணாமலையில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம்..!

எ.வ.வே.கம்பன்

திருவண்ணாமலை மண்டல திமுக மருத்துவ அணி சார்பில் திருவண்ணாமலை யில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம் நடைபெற உள்ளது இந்த பாசறை கூட்டத்தில் அமைச்சர்கள் சமூக நீதிக் காவலர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர் இது குறித்து திருவண்ணாமலை மண்டல திமுக மருத்துவரணி பொறுப்பாளரும் மாநில மருத்துவர் அணி துணைத்தலைவருமான எ.வ.வே.கம்பன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்;

திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை என்பது மனித நேயமும் சமூக நீதியும் தான், அனைத்து இடங்களிலும் சமூக நீதியை நிலைநாட்டி வருகிறோம். வகுப்புரிமை எனப்படும் இட ஒதுக்கீடு அனைவருக்கும் சம விகிதத்தில் தரப்பட்டு வருகிறது என்ற சமூகநீதி திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம்.

சமூக நீதி சமத்துவம் சுயமரியாதை மொழிப்பற்று இன உரிமை மாநில சுயாட்சி ஆகிய கருத்துக்களின் அடித்தளத்தில் நிற்கக்கூடிய இயக்கம் தான் திமுக.

வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமில்லாமல் சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதார கல்வி சமூகம் சிந்தனை செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும்.

இந்தியாவின் பிற மாநிலங்களை ஆளும் அரசுகள் தமிழகத்தின் திராவிடம் மாடல் கொள்கையையும் கோட்பாடுகளையும் அறிவதில் ஆர்வமாக உள்ளனர். அதை தங்கள் மாநிலத்தில் நடைமுறை படுத்துவதில் துடிப்புடன் உள்ளனர்.

கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் சமூக நீதியில் கழகத்தின் பங்கு குறித்து எப்போதும் வெளிப்படுத்தி வருகிறார். கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக நீதிக்கு எதிரான சனாதனத்தை எதிர்ப்பதில் எப்போதும் உறுதியாக உள்ளார்.

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மண்டல திமுக மருத்துவரணி சார்பில் ஜனவரி 4ஆம் தேதி அன்று திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி அரங்கத்தில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த பாசறை கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தமிழர் இயக்க பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் மற்றும் சமூக நீதி காவலர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

எனவே திருவண்ணாமலை மண்டலத்திற்குட்பட்ட கடலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர்கள், தலைவர்கள் துணைத் தலைவர்கள் தொகுதி அமைப்பாளர்கள் நிர்வாகிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆய்வக வல்லுநர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என எ.வ.வே.கம்பன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top