Close
ஜனவரி 9, 2025 8:48 மணி

செங்கம் அருகே புதிய மின்மாற்றி: எம் எல் ஏ தொடங்கி வைத்தார்

மின்மாற்றியை திறந்து வைத்து கிரி எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த   கண்ணாக்குருக்கை – சேரந்தாங்கல் பகுதியில் 100- கி.வா திறன் கொண்ட மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம்  செங்கம் அடுத்த   கண்ணாக்குருக்கை – சேரந்தாங்கல் பகுதியில் சுமார்  500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் ,அப்பகுதி மக்களுக்கு போதுமான மின்சார வசதி இல்லாத காரணத்தால் மின்சார பற்றாக்குறை நிலவி வந்தது.

இதனால் அடிக்கடி டிரான்ஸ்பார்மர் பழுதாவதால் வீடுகளில் மின்சார பற்றாக்குறையால் வீட்டில் உள்ள மின் சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு விடுவதால் பொதுமக்கள் அதிகளவில் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்களிடம் தெருவிளக்கு மற்றும் வீடுகளுக்கு செல்லும் மின்சாரத்திற்கு மட்டுமே தனி மின் மாற்றி அமைத்து தர வேண்டுமென கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

அக்கோரிக்கையினை ஏற்று அப்பகுதியில் தெரு மின் விளக்குகளுக்கு மட்டுமே 100 கி.வா திறன் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை கிரி எம் எல் ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த விழாவில் மின்சார துறை கோட்ட பொறியாளர் சங்கரன், ஒன்றிய கழகச் செயலாளர் செந்தில்குமார் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள் ,ஊராட்சி மன்ற தலைவர் மண்ணம்மாள், கிளை கழக செயலாளர் ,ஒன்றிய அணி அமைப்பாளர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், மின்சார வாரிய ஊழியர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதிய பேருந்து நிலையம் திறப்பு எம்எல்ஏ ஆய்வு

செங்கம் அடுத்த மேல் செங்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டிடங்களை திறந்து வைக்க வரும் 4ம் தேதி தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு வருகை புரிய உள்ளார்.

அதனை முன்னிட்டு விழா நடைபெறும் இடத்தில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி அங்கு நடைபெற்ற வரும் விழா பணிகளை ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top