Close
ஜனவரி 7, 2025 7:23 மணி

பொங்கல் பரிசுத்தொகுப்பு: நெரிசலை தவிர்க்க வீடு வீடாக டோக்கன்..!

டோக்கன் வழங்கும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் குடும்ப மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த பொங்கல் பரிசுத் தொகைப்பை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மத்திய-மாநில அரசு ஊழியா்கள், வருமான வரி செலுத்துவோா், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோா், சா்க்கரை அட்டைதாரா்கள், பொருள் இல்லா அட்டைதாரா்களைத் தவிா்த்து ஏனைய குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை, வேங்கிக்கால் புதூரில் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை வீடு, வீடாகச் சென்று விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 282 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இதற்கான டோக்கன் வழங்கும் பணியில் நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் ஈடுபடுவா்.

பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் உரிய நேரத்தில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள நபா்களில் ஒருவா் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

ஆண்களுக்கு தனி வரிசை, பெண்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், வட்ட வழங்கல் அலுவலா் தியாகராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top