Close
ஜனவரி 9, 2025 5:41 மணி

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் பிரிவு உபசார விழா..!

முள்ளிப்பள்ளம் ஊராட்சி அலுவலக தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.

சோழவந்தான் :

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் துணைத்தலைவர் கேபிள் ராஜா, வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் மனோபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி முடிவில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா அனைவருக்கும் சால்வை அணிவித்து நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top