Close
மே 18, 2024 9:51 காலை

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடக்கம்

மதுரை

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில், பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடக்கி வைத்தார்.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில், பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்  தலைமையில் நடைபெற்றன.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் மதுரை மாநகராட்சி, வார்டு 75-ல் உள்ள சுந்தரராஜபுரம் மற்றும் வார்டு 21-ல் உள்ள திரு வி க மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிறப்பு முகாமில்,  தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களைச் சென்று சேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை , தமிழ்நாடு முதலமைச்சர் , 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்.

அதன் தொடர் நிகழ்வாக, மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57 ஆரப்பாளையம் பகுதியில் சிறப்பு முகாமினை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் தொடக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இம்முகாம்கள் 18.12.2023 முதல் 06.01.2024 வரை நடைபெறு கிறது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டுகளில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டு சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண் 75 சுந்தர்ராஜபுரம் தனியார் மஹாலிலும் மண்டலம் 2 வார்டு எண் 21 ,22ஆகிய வார்டு பகுதிகளுக்கு திருவிக மாநகராட்சி பள்ளியிலும், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது .

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தான திட்டங்களின் ஒன்றாக மக்களுடன் முதல்வர் திட்டம் இருந்து வருவதுடன் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைக ளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென, அமைச்சர் வலியுறுத்தினார்.

மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , மாற்றுத்திறனாளிகளி டம் இருந்து மனுக்களை பெற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், மாற்றுத் திறனாளிகளிடம் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். காது கேட்கும் கருவியை வழங்கும் போது காது கேளாதோர் குறைபாடுக ளைக் கண்டறியும் ஆடியோகிராம் கருவியைக் கொண்டு உரிய பரிசோதனை மேற்கொண்ட பிறகு கருவிகளை வழங்கினால் தான் அது உரிய பலனை மாற்றுத்திறனாளிக ளுக்கு அளிக்கும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

அதன்பின்பு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி வெள்ளிவீதியார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 217 மாணவியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பாக, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. சௌ. சங்கீதா , மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், வருவாய் கோட்டாட்சியர் ர.த. ஷாலினி , மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top