Close
ஜனவரி 9, 2025 3:37 மணி

காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பெண் பாதுகாப்பு, பொங்கலுக்கு 1000 வழங்குதல் , போதை இல்லா தமிழகம் உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை இந்தியா முழுவதும் பெரும் கண்டனத்தை பெற்றது.

இந்த செயலில் ஈடுபட்ட நபர் மட்டுமில்லாத இனி இது போன்ற செயல்கள் நடக்கக்கூடாது எனவும் இதை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக எதிர் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீட்டில் இருக்கும் பெண்கள் முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை தமிழகத்தில் பாதுகாப்பில்லாமல் பாலியல் வன்கொடுமை நடைபெறுவதாகும், தமிழக அரசு இதனை தடுக்க இயலாமை உள்ளதை கண்டித்தும் வரும் பொங்கலுக்கு பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குதல், தமிழகத்தில் நிலவும் கஞ்சா போதையில் முற்றிலும் அகற்றி போதை இல்லா தமிழகம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை கோஷங்களாக எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நான் வெங்கடேஷ், மாவட்ட பொருளாளர் லட்சுமணன், மாநகர நிர்வாகிகள் கமலநாதன், வெங்கடேஷ் , பூபதி, தொழிற்சங்க நிர்வாகி மௌலி, ஒன்றிய செயலாளர் ஒன்றிய மகளிர் அணியினர் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top