வைணவ திவ்ய தேசங்கள் உள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பல திருக்கோயில்கள் அமைந்துள்ளது.
முக்கிய திருவிழா காலங்களில் வடகலை மற்றும் தெண்கலை இடையே பிரபந்தங்கள் பாடுவதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
ஒவ்வொரு விழாக்காலங்களிலும் இது போன்ற பிரச்சனைகள் எழுவதும் காவல்துறை இந்து சமய அறநிலையத்துறை மீண்டும் சமரசம் செய்து அதன் பின் சாமி புறப்பாடு ஊர்வலம் என நடைபெறுவதும் வழக்கமாக வருகிறது.
திருக்கோயிலில் மன அமைதிக்கும் இறையருள் பெறுவதற்கும் ஒரு பக்தர்கள் இதுபோன்ற சலசலப்பை கண்டு மிகுந்த மனம் வருத்தம் அடைகின்றனர்..
அவ்வகையில் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் நிகழ்வுக்கு முன்பு மீண்டும் இதே நிகழ்வு இரு தரப்பினருக்கும் நடைபெற்றது.
சமரசம் செய்து கொண்டிருக்கையிலே தொடர்ந்து பாடிக் கொண்டிருப்பதால் பிரச்சினை நீண்டு கொண்டே இருந்த நிலையில் உடனடியாக அனைவரும் பாடிவிட்டு வெளியே செல்லுமாறும் பக்தர்கள் நீண்ட மணிக்கணக்கில் தரிசனத்திற்கு காத்திருக்கிறார்கள் என கூறி அனைவரையும் மெல்ல மெல்ல வெளியேற்றினர்.
காஞ்சியில் தீராத பிரச்சினையாக இந்த பிரச்சனை அவ்வப்போது எழுவதும் ஒவ்வொரு நாளும் இதனை சமாதானம் செய்வதும் என எந்த ஒரு முழு உத்தரவையும் பெற முடியாமல் உள்ளது அனைத்து தரப்பினருக்கும் இது தர்ம சங்கடங்களை உருவாக்குகிறது.