Close
ஜனவரி 15, 2025 1:02 மணி

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா..!

இலவச தலை கவசங்களை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட போக்குவரத்துத்துறை சாா்பில் 36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு  விழா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு வாகன ஓட்டிகள் தலைக் கவசம் மற்றும் சீட் பெல்ட் ஆகியவற்றை அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

தொடர்ந்து திருவண்ணாமலை-வேலூா் சாலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து ஆட்சியா் விளக்கினாா்.

மேலும், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இலவச தலைக்கவசங்களை அவா்களுக்கு வழங்கினாா். இதையடுத்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த கண்காட்சி பேருந்தை ஆட்சியா் திறந்து வைத்து கண்காட்சியைப் பாா்வையிட்டாா். இக்கண்காட்சி பேருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிவகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, முருகேசன், கருணாநிதி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், போக்குவரத்து காவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலக அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top