Close
ஜனவரி 15, 2025 3:36 மணி

பள்ளிபாளையம் அருகே 1 டன் ரேஷன் அரிசி பதுக்கல் : பெண் மீது வழக்கு..!

கோப்பு படம்

நாமக்கல்:

பள்ளிபாளையம் அருகே தகர கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பள்ளிபாளையம் அருகே ஆவாரம்பாளையத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்ததும். இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை எஸ்.ஐ ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஆவாரம்பாளையம் முனியப்பன் கோயில் தெருவில் உள்ள முத்து என்பவருக்கு சொந்தமான தகர கொட்டகையில், ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மொத்தம் 21 மூட்டைகளில் 1 டன் எடையுள்ள ரேசன் அரிசி மூட்டை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வியாபாரம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து கோமதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top