திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது .
திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் பாரம்பரிய தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழாவினை தொடங்கி வைத்து புதிய பானையில் பொங்கல் வைத்து வருவாய்த்துறை அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு ஆட்சியர் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சியரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இவ்விழாவில் கோட்டாட்சியர் மந்தாகினி, தாசில்தார் துரைராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, தலைமை இடத்து துணை தாசில்தார் மணி, கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் உள்ள திவ்யா கல்வி நிறுவனத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பள்ளி வளாகத்தில் புதிய அடுப்பு அமைத்து புதிய பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இவ்விழாவில் பள்ளித் தாளாளர் செல்வராஜ், செயலாளர் செந்தில்குமார் மற்றும் சேத்துப்பட்டு பேரூராட்சி துணைத் தலைவர் செல்வராசன் பள்ளி கல்லூரி முதல்வர்கள் துணை முதல்வர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.