Close
ஜனவரி 15, 2025 2:38 மணி

பெரியபாளையம் அருகே காரணிபாட்டை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா

பெரியபாளையம் அருகே காரணிபாட்டை கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பங்கேற்பு.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கோடுவெளி ஊராட்சி, காரணிபாட்டை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான பிரபுஅரசு ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக சிறுபாண்மைபிரிவுவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹீம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இந்து, கிருத்துவர், முஸ்லீம் என மதசார்பற்று கிராம பொதுமக்கள் ஒன்றுகூடி தை திருநாளாம் பொங்கல் திருநாளில் செங்கரும்புடன் கூடிய சமத்துவ பொங்கல் வைத்து பின்னர் இனிப்பு, பழங்களை படையலிட்டு தீபாராதனை காண்பித்து சூரியபகவானை அனைவரும் வழிபட்டனர்.

இவ்விழாவிற்கு திருவள்ளூர் வடக்கு ஒன்றிய தலைவர் காரணி பி.ஜி.எஸ். ஹரி சதீஷ், பூபதி, திருவள்ளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், .பார்த்திபன், சையது இஸ்மாயில்,  சிட்டிபாபு, வரதராஜன் உள்ளிட்ட கிராமபொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top