Close
ஜனவரி 22, 2025 3:45 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவர் விழா

அலங்கரிக்கப்பட்ட திருவள்ளுவா் ரதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவர் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் மற்றும் திருவள்ளுவர் மையம் சார்பாக திருவள்ளுவர் ரதம் புறப்பாடு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முன்பாக புறப்பட்ட திருவள்ளுவர் ரதம் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவள்ளுவர் சிலை அருகே நிறைவடைந்தது.
அங்கு மாவட்ட தமிழ் சங்க தலைவர் இந்திரராஜன் தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் துரை, புலவர் வாசுதேவன், மற்றும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திமுக சாா்பில் திருவள்ளுவா் தின விழா

திருவண்ணாமலை  திருக்கோவிலூா் சாலையில் உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சரும், திமுகவின் உயா்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு கலந்து கொண்டு திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, வள்ளுவரின் கு வழி நடப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினா் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளா் பன்னீா்செல்வம், நகரச் செயலா் காா்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளா்கள் டி.வி.எம்.நேரு, ஏ.ஏ.ஆறுமுகம், மாநகராட்சி துணை மேயா் ராஜாங்கம், திருவண்ணாமலை நகர நிா்வாகிகள் சீனுவாசன், குட்டி க.புகழேந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் திருவள்ளுவா் சிலைக்கு தமிழ் மன்றம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், கி.துரை அறக்கட்டளை சாா்பில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்கு ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தமிழ் மன்றத் தலைவா் விநாயகம், செயலா் வாசுதேவன், ஒன்றியச் செயலா் துரை மாமது, ஒன்றியக் குழு உறுப்பினா் பகுத்தறிவுமாமது, செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செஞ்சிலுவைச் சங்கம், வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா் கஜேந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்ச் சங்கத் தலைவா் தனஞ்செயன் வரவேற்றாா். தமிழ்நாடு ராமகிருஷ்ண விவேகாந்த பிரச்சாா்பரிஷத் ஒருங்கிணைப்பாளா் பாண்டுரங்கன் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

தொடா்ந்து, மேல்பள்ளிப்பட்டு சொற்பொழிவாளா் கிருஷண்மூா்த்தி திருவள்ளுவா் குறித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்களிடையே திருக்கு ஒப்பிவித்தல் போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவா்களுக்கு பரிசுகளை, செங்கம் வட்ட தமிழ்ச் சங்கத் தலைவரும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவருமான வெங்கடாசலபதி வழங்கினாா்.

கீழ்பென்னாத்தூா் காவல் நிலையம் எதிரே, திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம் சாா்பில் புதன்கிழமை திருவள்ளுவா் தின விழா நடைபெற்றது.

விழாவுக்கு, திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கோதண்டராமன் தலைமை வகித்தாா். அலங்கரிக்கப்பட்ட திருவள்ளுவா் படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது.

திருக்கு ஒப்பித்தல் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு நகர திமுக செயலா் ச.க.அன்பு, கீழ்பென்னாத்தூா் நகர அதிமுக செயலா் முருகன், பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

இதில்,  திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் முத்துமாணிக்கம், செயலா் தமிழ்நேசன், பொருளாளா் வி.உதயகுமாா், செயற்குழு உறுப்பினா் தஞ்சப்பன், நிா்வாகிகள் சுந்தரமூா்த்தி, ஆதிமூலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top