நாமக்கல்:
மோகனூர் அருகே கொமதேக சார்பில் நடைபெற்ற, பொங்கல் விளையாட்டுப் போட்டியில், மாதேஸ்வரன், எம்.பி., கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் கிழக்கு ஒன்றியம் வெள்ளாளப்பட்டியில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் தைப்பொங்கல் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பல்வேறு தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் லோக்சபா எம்.பி., மாதேஸ்வரன் விழாவில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிப்பேசினார்.
கொமதேக ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட இணை செயலாளர் தமிழரசு, மோகனூர் கிழக்கு ஒன்றிய செயளாலர் சிவகுமார், நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட திரளானவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.