நாமக்கல்:
24 மனை தெலுங்கு செட்டியார் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
24 மனை தெலுங்கு செட்டியார் ஏழூரு பூர்வீக அறக்கட்டளையின் சார்பில் முப்பெரும் விழா அறக்கட்டளை நிர்வாகத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கப்பட்டது.
பின்னர் பெண்களுக்கான கோலப்போட்டி, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான தனித்திறன் போட்டி ஆகியன நடைபெற்றது. இந்த போட்டிகளில் நாமக்கல், ராசிபுரம், பனமரத்துபட்டி, புதுச்சத்தரம், திருச்சி, வெள்ளகோயில் உள்ளிட்ட 27 ஊர்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்ட அனைவருக்கும் அறக்கட்டளை சார்பில் வெள்ளி காசுகள், பொங்கல் சீர், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. திறன் மேம்பாடு மற்றும் தனித்திறமை சாதனையாளர்களுக்கு கம்ப்யூட்டர்கள், கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கபட்டன.
விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கலியமூர்த்தி, குமார், வெங்கடாசலம், பாலகிருஷ்ணன், செல்வராஜ், ஜோதிமணிகண்டன், அன்பரசு, கருணாகரன், பிரசாந்த் சரவணன், ஜெய்கணேஷ், கிஷோர்குமார், சதீஷ் நாகராஜன், கார்த்தி வீரசாமி, வெங்கட், சர்மிளா சரவணன் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.