Close
ஜனவரி 22, 2025 6:49 காலை

திருச்சியில் டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கிய தி.மு.க. பிரமுகர்

டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது42). இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மது பான கடையில் பார் நடத்தி வருகிறார். நேற்று இரவு அந்த பாருக்கு திருவானைக்காவலை சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் சிலர் வந்தனர்.

அவர்கள் பாரில் இருந்த காலி பாட்டில்களை அடித்து நொறுக்கி ரகளை செய்தனர். மேலும் பாரின் கதவினையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இதுபற்றி இளங்கோ அளித்த புகாரின் அடிப்படையில் ஜனார்த்தனன் மற்றும் சிலர் மீது ஸ்ரீரங்கம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜனார்த்தனன் அந்த பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். பார் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top