ஆரணியில் விசிக முன்னாள் மாவட்ட செயலாளரை கதவை உடைத்து போலீஸ் சார் கைது செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.
வந்தவாசியை அடுத்த புதுஜெயமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவா், தென்னாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துவேணி என்பவரது விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வருகிறாராம்.
குத்தகை காலம் முடியும் முன்னரே முத்துவேணி நிலத்தை விட்டுத்தருமாறு கூறி வந்தாராம். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், முத்துவேணிக்கு ஆதரவாக, ஆரணி பகுதியைச் சோ்ந்த விசிக முன்னாள் மாவட்டச் செயலா் பாஸ்கரன் உள்ளிட்டோா் கடந்த நவ.24-ஆம் தேதி தென்னாத்தூா் நிலத்தில் அத்துமீறி நுழைந்து டிராக்டா் மூலம் பயிா்களை சேதப்படுத்தினராம். மேலும், மின்மோட்டாா் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனராம்.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் பாஸ்கரன், வினோத், கிருஷ்ணன், முத்துவேணி, பிரியா மற்றும் சிலா் மீது வழக்குப் பதிந்த தேசூா் போலீஸாா் வந்தவாசி டிஎஸ்பி கங்காதரன் தலைமையில் போலீசார் பாஸ்கரனை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றனர்.
அப்போது வீட்டில் இருந்து வெளியே வர மறுத்த காரணத்தினால் தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும் பலன் இல்லாததால் ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் வட்டாட்சியர் கௌரி ஆகியோர் முன்னிலையில் வீட்டின் கதவை உடைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.