Close
ஜனவரி 22, 2025 6:43 காலை

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிக மோசம்: ஜனதா தளம் கட்சி மாநில தலைவர் ராஜகோபால் பேட்டி

ஜனதா தளம் கட்சி மாநில தலைவர் ராஜகோபால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஜனாதளம் கட்சியின் மாநில தலைவர் ராஜகோபால் கூறினார்.

ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்கு மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது. அப்படி எடுத்தால் தான் உண்மையான இட ஒதுக்கீட்டின் பயனை மக்கள் அடைய முடியும். பீகாரில் இதே போல் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு காரணம் மதுபான கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு தான். கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற அனைத்து சமூக விரோத செயல்களுக்கும் மதுபான கடைகள் தான் காரணமாக உள்ளது. எனவே ஜனதா தளம் கட்சியின் கொள்கைப்படி பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.

மேலும் கல்வி வளாகங்களில் பாலியல் பிரச்சனைகளை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக அரசுக்கும் கவர்னருக்கும் நடைபெறும் மோதலை தீர்க்கும் வண்ணம் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவினை பிறப்பித்திருக்கிறது. அந்த உத்தரவை தமிழக கவர்னர் ஏற்றுக்கொண்டு தமிழக அரசுடன் இணைந்து செயல்பட்டு துணைவேந்தர்களை உடனடியாக  நியமிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனதா தளம் கட்சிக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை. மீண்டும் கட்சியை வளர்ப்பதற்காக ஜூலை 20ஆம் தேதி திருச்சியில் மிகப்பெரிய அளவிலான ஜனாதளம் கட்சியின் மாநாடு காமராஜர் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் நடத்தப்பட இருக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் சிதறி கிடக்கும் ஜனாதனம் கட்சிகள் கலந்து கொள்ள இருக்கின்றன. ஒடிசா முன்னாள்  முதலமைச்சர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் லாலன் சிங் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராசி மணல் என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்காக காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பின்னர் வந்த திராவிட கட்சிகளின் அரசுகள் அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். அந்த இடத்தில் தடுப்பணை கட்டினால் 10 மாவட்ட மக்கள் நீர் ஆதாரத்தை பெற முடியும். எனவே அதனை கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரவும் ஜனதா தளம் திட்டமிட்டுள்ளது. மேலும் காவிரி, கொள்ளிடம், தென்பெண்ணையாறு பாலாறு உள்பட அனைத்து ஆறுகளிலும் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்டி கடலில் வீணாக கலக்கும் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இவ்வாறு அவர் கூறினார்.

பேடியின் போது மாநில துணைத்தலைவர்கள் கே. சி. ஆறுமுகம், வேங்கை சந்திரசேகர், பொதுச் செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் அறிவழகன் மற்றும் தொழிற்சங்க தலைவர் வையாபுரி உள்பட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top