Close
ஜனவரி 22, 2025 7:05 காலை

மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு காலண்டர் : தஞ்சை வேளாண் இணை இயக்குனர் வழங்கல்..!

தஞ்சை வேளாண் இணை இயக்குனர் வித்யா மற்றும் வேளாண் துணை இயக்குனர் சுஜாதா ஆகியோர் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடிக்கான தொகுப்பினை வழங்கினார்கள். உடன் மதுக்கூர் வேளாண் துணை இயக்குனர் திலகவதி

மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் வித்யா மற்றும் வேளாண் துணை இயக்குனர் சுஜாதா ஆகியோர் செயல்படுத்தப்படும் வேளாண் திட்ட பணிகள் பற்றி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடிக்கான தொகுப்பு செயல் விளக்கத்தின் கீழ் பின்னேற்பு மானியத்துடன் கூடிய சான்று பெற்ற உளுந்து விதை நுண்ணூட்டம் டிவிரிடி மற்றும் திரவ உயிர் உரங்களை விவசாயிக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் வழங்கினார்.

மேலும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள் சாகுபடி செய்யும் முதன்மை பயிர்களுக்கு தேவையான பயிர் பாதுகாப்பு பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயிர் பாதுகாப்பு காலண்டரை வேளாண் இணை இயக்குனர் வித்யா மற்றும் வேளாண் துணை இயக்குனர் சுஜாதா ஆகியோர் முன்னோடி விவசாயிகளுக்கு வழங்கினார்.

பின் மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையத்தினை ஆய்வு செய்து வல்லுனர் விதைகள் விதை பரிசோதனை போன்றவை பற்றியும் ஆய்வு செய்தார். பின் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் அனைத்து வேளாண் உதவி அலுவலர்கள் அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் பயிர் அறுவடை பணியாளர்களின் பணிகளை ஆய்வு செய்து திட்டங்களை காலத்தே விவசாயிகளுக்கு தெரிவித்து உரிய நேரத்தில் இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கிட கூறினார்.

பின் வேப்பங்குளம் தமிழ்மணி அவர்கள் வயலில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை இடுபொருள் உற்பத்தி அறையினை ஆய்வு செய்து போரான் எருக்கு கரைசல் மீன் அமினோ அமிலம் ஜீவாமிர்த கரைசல் ஆகியவற்றை பயன்படுத்தியதனால் பயிரில் ஏற்பட்ட விளைவுகள் பற்றி கேட்டறிந்தார்.

பின் ஆலத்தூர் துணை வேளாண்மை விரிவாக்க மைய பணிகளை வேளாண் இணை இயக்குனர் மற்றும் வேளாண் துணை இயக்குனர் இருவரும் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு ராமு சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். வேளாண் அலுவலர் சரவணன் மற்றும் வேளாண் உதவி இயக்குனர் சித்த பணிகளின் தற்போதைய நிலை குறித்து வேளாண்மை இணை இயக்குனரிடம் எடுத்து கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top