Close
ஜனவரி 22, 2025 3:47 மணி

பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களின் உறவினர்களுக்கு இவ்வளவு வசதியா !!

காஞ்சிபுரம் பழைய இரயில்வே சாலையில் இயங்கி வரும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள தாய் மற்றும் குழந்தை நல சிறப்பு பராமரிப்பு மையத்தில் நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு கிராமப்புறங்களில் இருந்தும் ஏராளமான தாய்மார்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு குழந்தையை பெற்றெடுத்து வருகின்றனர். அவ்வாறு குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு உதவியாக அவர்களுடன் வரும் உறவினர்கள் பயன்பெறும் வருகையில் காத்திருக்கும் அறை வேண்டி பொது மக்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் அவ்கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்  எழிலரசன் அவர்களின் 2023-2024ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ரூ.29லட்சம் மதிப்பீட்டில் மின் விசிறி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அமரும் இருக்கைகள்,டி.வி. என சகல வசதிகளுடன் கூடிய உடனாளர்கள் காத்திருக்கும் அறை புதிதாக கட்டப்பட்டு அதன் திறப்பு விழாவானது இன்று நடைபெற்றது.

தாய்மார்கள் கை கொடுத்து நன்றி தெரிவித்த நெகழ்ச்சியான தருணம்

இதனை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து,பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி அங்கு அமைக்கப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டும்,அதுகுறித்து பொது மக்களிடம் எடுத்துரைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் தொலைக்காட்சியை ஆன் செய்தப்பின் பொதுமக்களிடம் தொலைக்காட்சியை பார்க்கும் பொழுது உங்களுடன் வரும் குழந்தைகளையும் நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என அன்பாக வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி,மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம்,மண்டலக் குழு தலைவர் சந்துரு,திமுக நிர்வாகிகள் ஏ.எஸ் முத்துசெல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top