Close
ஜனவரி 22, 2025 8:48 மணி

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடியரசு தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 76வது குடியரசு தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் நடைபெற்றது.

குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அணிவகுப்புகள் நடைபெறும்.

அந்த வகையில் 76வது குடியரசு தினத்தையொட்டி அணிவகுப்பிற்கான ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 2 நாட்களாக காவல்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது .

அதேபோல் இன்று 2ம் ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதையடுத்து வருகிற 24ஆம் தேதி கடைசி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

குடியரசு தின விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் காவல்துறை தேசிய மாணவர் படை சாரணர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஒத்திகை நடைபெற்றது.

மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குதல் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் என நடைபெற உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top