Close
ஜனவரி 23, 2025 2:40 மணி

மண் சரிவில் உருண்டு வந்த பாறைகள் அகற்றும் பணி தீவிரம்..!

பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட மண் சரிவில் உருண்டு வந்த 40 டன் ராட்ச பாறையை 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான அண்ணாமலையார் திருக்கோயிலில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மீது கடந்த டிசம்பர் மாதம் செஞ்சால் புயல் காரணமாக பெய்த பலத்த மலையில் மழையின் மீது பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.  வரலாறு காணாத மழை பெய்தது கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சிக்கிக் கொண்டு உயிரிழந்தனர்  .

வல்லுநர் குழு

தொடர்ந்து மண் சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக புவியியல் வல்லுநர் குழு தமது ஆய்வு அறிக்கையில் எச்சரித்துள்ளது. மேலும், இந்த மலைப்பகுதி வசிப்பதற்கு உகந்த இடம் இல்லை எனவும், அடுத்தடுத்து கனமழை பெய்தால் மேலும் மண் சரிவும், பாறைகள் உருண்டு விழும் ஆபத்து இருப்பதாகவும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவண்ணாமலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது அதனால் பாறைகளை அகற்றுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். பாறைகளை வெடி வைத்து தகர்க்கலாமா அல்லது ரசாயனம் கலந்த முறையில் பாறைகளை வெடிக்க வைத்து அகற்றலாமா என்ற ஆலோசனையும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது அப்பகுதியில் அதிகம் குடியிருப்புகள் இருப்பதால் பாறைகள் வெடித்து சிதறாக அளவிற்கு கவனமாக பாறைகளை உடைக்கும் பணியில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top