Close
ஜனவரி 23, 2025 6:23 மணி

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது..!

தபால் ஒட்டு-கோப்பு படம்

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு இன்று துவங்கியது.

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சிகள் களத்தில் உள்ளன. அ.தி.மு.க., தே.மு.தி.க, மற்றும் த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துவிட்டன.

வாக்கு எண்ணும் மையத்தில் கம்பி, தகரம் போன்றவைகளைப் பயன்படுத்தி தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. வாக்குப் பெட்டிகள் வைப்பதற்கான அறை, பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை சரி செய்யும் பணியும் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குப்பதிவு செய்ய இயலாத, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாக்குகளை தபாலில் செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தொகுதியில், 209 வயதானவர்கள், 47 மாற்றுத்திறனாளிகள் என்று 256 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு ’12-டி’ படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒப்புதல் பெற்றனர். இந்நிலையில், இன்று (23ம் தேதி) தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தகுதியானவர்கள் வீடுகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று முதல் ஜனவரி 27ம் தேதி வரை வாக்குப்பதிவு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். தபால் வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top