திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி சேத்துப்பட்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் சின்னய்யா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சேத்துப்பட்டு நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் .
மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதா முன்னாள் அமைச்சர் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற தலைவர் சின்னையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் செல்வன் ,ஒன்றிய செயலாளர் ராகவன், வீரபத்திரன், ஸ்ரீதரன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட குழு உறுப்பினர்கள்,
இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட அமைப்பாளர்கள், அணி அமைப்பாளர்கள், ஒன்றிய செயலாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தின் சார்பில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சியில் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ பேசுகையில்;
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தமிழக மக்களுக்காக செய்த திட்டங்கள் சலுகைகள் குறித்து எடுத்துரைத்துப் பேசினார்.
மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் .அதற்கு கழக நிர்வாகிகள் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலர அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தி பேசினார்.
தொடர்ந்து 1000 பொது மக்களுக்கு நல திட்ட உதவிகளையும் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் பேனா பென்சில் போன்ற பொருட்களையும் அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ வழங்கினார்.
இக்கூட்டத்தில் அதிமுக கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் மாவட்ட அவை தலைவர் நாராயணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அரவிந்தன், புதுப்பாளையம் ஒன்றிய செயலாளர் பழனிராஜ் ,வழக்கறிஞர் ரமேஷ், கலசப்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன் மற்றும் அதிமுக அணி அமைப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் ,ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.