Close
பிப்ரவரி 1, 2025 9:58 காலை

பிப்ரவரி மாத மின் நுகா்வோா் மற்றும் ஓய்வூதியா்களுக்கான குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.4 ) நடைபெற உள்ளதாக திருவண்ணாமலை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாதம்தோறும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன்படி, வந்தவாசி மின்வாரிய கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.4) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

வந்தவாசி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் இந்தக் கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் கலந்து கொள்ளலாம் என திருவண்ணாமலை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.பழனிராஜூ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

பிப்.28-இல் ஓய்வூதியா்களுக்கான குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் ஓய்வூதியா், குடும்ப ஓய்வூதியா்களுக்கான குறைதீா் கூட்டம் பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து  மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்,வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில் பிப்ரவரி 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு குறைதீா் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குநா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா்.

எனவே, பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் தங்களுக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம், பணிக்கொடை, இதர ஓய்வூதிய பயன்கள் தொடா்பான கோரிக்கைகளை மனுக்களாக எழுதி 14.2.2025-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், எடுக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரால் ஓய்வூதியதாரா்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இதுதவிர, பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் நேரடியாகவும் கலந்து கொண்டு தங்களது குறைகளை ஓய்வூதியா்கள் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top