மூன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, தொடர் போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மாநில தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநில செயற்குழு கூட்டத்தில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக அரசு ஊழியர்களின் கோரிக்கையை பாராமுகமாக இருக்கும் தமிழக அரசின் செயலை கண்டிக்கும் வகையில் தொடர்ச்சியான தொடர் போராட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அவ்வகையில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முழு நாள் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜாக்டோ ஜியோ சார்பாக பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் தாலுகா அலுவலகங்களில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்துதல் பிப்ரவரி 25ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களையும் எழுச்சிமிகு மறியல் போராட்டம் முன்னெடுப்பது மார்ச் 19ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தலைவர் பாஸ்கரன் கூறுகையில், நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடும் ஊழியர்களான தங்களுக்கு வேலை நிறுத்த போராட்டமே ஆயுதம் ஆகியுள்ளது என்பதை அரசு உணர்ந்து உள்ளது. அதே வழியில் இழப்பதற்கு ஏதுமில்லை என்பதை மீண்டும் உனதிடும் வகையில் நமது கோரிக்கைகளை நிறைவேறும் வரை காலையற்ற போராட்டம் நடத்திடுவது எனவும் அதற்கான தேதியை அப்போதைய சூழலில் மாநில செயற்குழு கூட்டி தீர்மானிக்கும் என தெரிவித்தார்.
இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் சீனிவாசன் மாநில பொருளாளர் டேனியல் ஜெய் சிங் புரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி செயலாளர் துரைமுருகன் மாவட்ட மகளிர் அணி சேர்ந்த திலகவதி உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்