Close
பிப்ரவரி 23, 2025 11:20 காலை

திருவண்ணாமலை மாட வீதிகளில் வாகன போக்குவரத்துக்கு தடை

போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்படும் மாட வீதி

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் பல மடங்காக உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனால் மாடவீதி மற்றும் அதனை ஒட்டியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இதனால் திருவண்ணாமலை நகர மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்து  இதற்கு ஒரு தீர்வு காணுங்கள் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.

திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாட வீதிகளில் ஆட்டோ, காா், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான 4 சக்கர வாகனங்களுக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிப்பது, மாட வீதிகளில் இரு சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதேபோல, நகரின் பல தெருக்களை ஒரு வழிச்சாலையாக மாற்றுவது, இதுவரை மாட வீதிகள் வழியாக சென்று வந்த அரசு, தனியாா் பேருந்துகளை மாற்று வழியில் இயக்குவது என்றும், இந்த நடைமுறைகள் அனைத்தும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி  சனிக்கிழமை முதல் திருவண்ணாமலை மாட வீதிகளில் இரு சக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இந்த சோதனை முயற்சி  (பிப்.1-ம் தேதி) முதல் நடைமுறைக்கு வந்தது. இதில் ஏற்படும் சாதக பாதகங்கள் அடிப்படையில் மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது

ஆட்டோக்கள் இயக்கப்படுவதிலும் முறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அண்ணா நுழைவு வாயில், ரயில் நிலைய வளாகம், காந்தி நகர் மைதானம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள மைதானம், எஸ்ஆர் ஸ்டீல் நிறுவனம் எதிரே உள்ள தற்காலிக பேருந்து நிலையம், சந்தைமேடு மைதானம், அந்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையங்களில் ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் மாட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவுதான். ஆனால் மற்ற வீதி அதாவது மாட வீதிக்கு அருகில் உள்ள கிருஷ்ணன் தெரு, சென்னப்பர் தெரு குயமட தெரு, கோபால் பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி வைத்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது,

பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு வருபவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர் அதனையும் மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும் எனது மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top