அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது.
காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ,மாநகர செயலாளர் தமிழ்செல்வன்,உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் பகுதியில் துவங்கிய அமைதி பேரணி மூங்கில் மண்டபம்,பேருந்து நிலையம் வழியாக காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.இந்த பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த அமைதி ஊர்வலத்தில் பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.