Close
பிப்ரவரி 23, 2025 4:16 மணி

மாற்று திறனாளிக்கு பெட்டிக் கடை : திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

காரியாபட்டி அருகே மாற்று திறனாளிக்கு வழங்கப்பட்ட பெட்டிக்கடையை, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை மேம்படுவதற்காக பல்வேறு வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்காக பல்வேறு உதவிகளை மத்திய அரசின் ஓஎன்.சி.ஜி நிறுவனம் தனது சி.எஸ்.ஆர் திட்டத்தின் மூலமாக செயல்படுத்தி வருகிறது .

இந்த திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 12 மாற்று திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் தொழில் செய்வதற்கான கடைகள், கடை நடத்த தேவையான பொருட்கள் மற்றும் நிதி மேலாண்மை விற்பனை முறை குறித்து பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் , விருதுநகர் மாவட்டத்தில், தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் முதல் கடை திறப்பு விழா காரியாபட்டி அருகே கடமங்குளம் கிராமத்தில் நடைபெற்றது மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடையை திறந்து வைத்து தேவையான பொருட்களை வழங்கினார் .

மேலும், அவர் பேசும்போது தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. மாவட்டத்தில் மாற்று திறனாளிகளின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக அந்த திட்டங்களை நிறைவேற்றி வருகின்றோம் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் மோகன்ராஜ் டாக்டர் ஜாஸ்மின் ராஜ்குமார் மற்றும் சார்ஜர் அறக்கட்டளையின் நிர்வாகிகள் , பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top