Close
பிப்ரவரி 24, 2025 4:51 காலை

திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து சமீபத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் – 2 திட்ட இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த தர்ப்பகராஜ் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து  திருவண்ணாமலை மாவட்டத்தின் 24வது ஆட்சியராக   தர்ப்பகராஜ் பொறுப்பேற்றார். அவருக்கு, பணி மாறுதலில் செல்லும் ஆட்சியர்  பாஸ்கர பாண்டியன் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.

புதிய ஆட்சியராக  பொறுப்பேற்றுள்ள தர்ப்பகராஜ், ஏற்கனவே ஆவடி மாநகராட்சி ஆணையாளர், உயர் கல்வித்துறை துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணிபுரிந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த இவர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதிய ஆட்சியர் தர்ப்பகராஜுக்கு, டிஆர்ஓ ராம்பிரதீபன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  பெற்றுக் கொண்டார்.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆட்சியர் தர்ப்பகராஜ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top