Close
பிப்ரவரி 23, 2025 9:42 மணி

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி

மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்பகராஜ், திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும்  புதிய பேருந்து நிலையம் கட்டிடம் கட்டுமான பணிகள் குறித்தும், பூமாலை காய்கறி வணிக வளாக கட்டிடம் கட்டுமான பணிகள் குறித்தும், மேலும் குடிநீர் திட்ட பணிகள் சாலை மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மாநகராட்சியில் திட்ட கழிவு மேலாண்மை பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பது குறித்து கேட்டு அறிந்து மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரம் செய்கிறார்களா என கேட்டறிந்தார்.
தொடர்ந்து நுண் உரம் தயாரிக்கும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு முறையாக குப்பைகள் தரம் பிரித்து சேகரம் செய்யப்படுகிறதா, நாளொன்றுக்கு எவ்வளவு டன் குப்பைகள் மாநகராட்சி பகுதியில் சேகரம் செய்யப்படுகிறது என்பது குறித்தும் எவ்வளவு டன் உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் தயாரிக்கும் காலை உணவுப் பணிகள் நடைபெறும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து,  எவ்வளவோ மாணவர்கள் இந்த திட்டத்தில் உணவு உட்கொள்கிறார்கள் என்பது குறித்தும், என்ன மாதிரியான உணவுகள் அவர்களுக்கு சமைத்து வழங்கப்படுகிறது என்பது குறித்தும் ,தேவையான மளிகை பொருட்கள் இருப்பு விவரங்கள் குறித்தும், சுத்தமாக சமையல் பணிகள் நடைபெறுகிறதா என்பது குறித்தும் அங்கு இருந்த பணியாளர்களிடம் விவரமாக கேட்டறிந்து உணவின் தரத்தினை உண்டு ஆய்வு செய்தார்.
மேலும் திருவண்ணாமலை டவுன்ஹால் பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு பள்ளி மாணவ மாணவியர்கள் காலை உணவு உட்கொள்வதை நேரடியாக சென்று பார்வையிட்டு உணவு தரமாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், அவர்கள் வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திறனறித் தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு மாணவ, மாணவிகளின் கற்றல் மற்றும் வாசித்தல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை புதிய ஆட்சியரின் முதல் இந்த திடீர் ஆய்வு அதிகாரிகளுக்கு கலக்கத்தையும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top