Close
பிப்ரவரி 23, 2025 1:49 காலை

ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி: கை உடைந்த நிலையிலும் பதக்கம் வென்ற காஞ்சிபுரம் சிறுவன்

ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தேசிய அளவிலான போட்டி கடந்த மாதம் 31 மற்றும் பிப்ரவரி 1 2 தேதிகளில் மதுரையில் உள்ள சர்வதேச சறுக்கு விளையாட்டு ஓடுதளத்தில் நடந்தது.

இதில் தமிழகம் ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் நான்கு வயது முதல் பதினாறு வயது வரை உள்ளோருக்கான பல்வேறு பிரிவுகள் வாரியாக தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடெமி சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு வயதின்கீழ் தலைமை பயிற்சியாளர் பாபு தலைமையில் பங்கேற்றனர்.

இதில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சசி மற்றும் பிரியதர்ஷினி தம்பதியின் மகனாக 5 வயது மகனான ஆத்விக் ஐந்து வயதுக்கு உட்பட்டோர் ஸ்பீட் ஸ்கேட்டிங் பிரிவில் பங்கேற்றார்.

இந்தப் போட்டியில் பங்கேற்க பயிற்சி பெற்றிருந்த நிலையில் திடீரென பயிற்சி போது வலது கையில் லேசான முறிவு ஏற்பட்டது. இருப்பினும் தளராது போட்டியில் பங்கேற்று ஒவ்வொரு சுற்றாக முன்னேறி இறுதி சுற்றில் பங்கேற்றார்.

இந்த போட்டியில் தொடர்ந்து ஆத்விக் மாநில அளவில் வெண்கல பதக்கம் வென்று காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்த்தார்.

காஞ்சிக்கு பெருமை சேர்த்த சிறுவன் ஆத்விக்கிற்கு காஞ்சிபுரம் ஸ்கேட்டிங் அகாடமி வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, சால்வை , சந்தன மாலை மற்றும் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை அனைத்து சிறுவர்களும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் அகடமி பயிற்சியாளர்கள் பெற்றோர்கள் விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர். கை உடைந்த நிலையிலும் தளராது போராடி வெண்கல பதக்கம் என்ற காஞ்சிபுரம் ஆத்விக் சிறுவனுக்கு சிறப்பான பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top