Close
ஏப்ரல் 19, 2025 7:04 காலை

இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி தெப்போற்சவத் திருவிழா

வாலாஜாபாத் அருகே பிரசித்தி பெற்ற இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி முருகர் கோவிலில் தை மாத கிருத்திகை முன்னிட்டு 13 ஆம் ஆண்டு தெப்போற்சவத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த இளையனார்வேலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி முருகர் திருக்கோவில் உள்ளது.

இந்த கோவிலில் தை மாத கிருத்திகை முன்னிட்டு 13 ஆம் ஆண்டு தெப்போற்சவம் திருவிழா விமரிசையாக நடைப்பெற்றது.

தெப்போற்சவத் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பாலசுப்பிரமணியர் மின்விளக்கு அலங்காரம் மற்றும் நாதஸ்வர இன்னிசை, வான வேடிக்கையுடன் திருக்குளத்தில் இறங்கி தெப்பத்தில் ஏறி மூன்று முறை பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும், தெப்போற்சவத் திருவிழா இன்னும் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இந்த தெப்போற்சவத் திருவிழாவில் இளையனார்வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியர் சுவாமியை வணங்கி கோவிலில் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top