Close
பிப்ரவரி 23, 2025 10:58 காலை

புத்தகக் கண்காட்சியில் இயற்கை சந்தை வேளாண்மை விளை பொருட்கள் நேரடி சந்தை

காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண் துறை தோட்டக்கலைத்துறை இணைந்து புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இயற்கை சந்தை வேளாண்மை விளை பொருட்கள் நேரடி சந்தையினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாவது மாபெரும் புத்தகக் கண்காட்சி கடந்த ஜனவரி 31ஆம் தேதி துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

50க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் பல ஆயிரம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பள்ளி , கல்லூரி மாணவர்கள், புத்தக ஆர்வலர்கள் என நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் வந்து புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

மேலும் புத்தகக் கண்காட்சிக்கு வரும் பொது மக்களுக்கு பொழுதுபோக்கும் வகையில், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பிரபல மேடை பேச்சாளர்கள் , மருத்துவ நிபுணர்கள் மேடை உரை, திரைப்பட கலைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என நாள்தோறும் மாலை நேரங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து இவ்வளாகத்தில் இயற்கை சந்தை விளை பொருட்களின் நேரடி விற்பனை சந்தையினை துவக்கியுள்ளது.

இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்து வேளாண் சந்தைகளில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், கீரைகள் மற்றும் சுய உதவிக் குழு பொருட்கள் , மர, பழ வகை மரங்கள் என வைக்கபட்டுள்ளதை ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு அது குறித்து விளக்கம் கேட்டு அறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர் பிச்சாண்டி, வேளாண்மை துறை இணை இயக்குனர் முருகன், துணை இயக்குனர் ராஜ்குமார், மகளிர் திட்ட அலுவலர் எழில்குமார் உள்ளிட்ட துறை அதிகாரிகள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top