திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த மேல்மணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் தவமணி
இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை கேகே நகர் பகுதியில் சேர்ந்த நபரிடம் 80 லட்சத்திற்கு ஜாக்குவார் F-pace பெட்ரோல் காரை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்றைய தினம் திருவள்ளூர் பகுதிக்கு சென்று இரவு 11 மணி அளவில் தனது வீட்டிற்கு வந்த அவர் காரை வீட்டில் வெளியே சாலையில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவு 12.50 மணியளவில் கார் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.
கார் முழுவதும் மளமளவென்று தீப்பிடித்து தொடங்கியதால் வீட்டின் இரண்டாவது தளம் வரை உயரத்தில் தீ பரவியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் பதறி தவித்தனர்.
கார் இரவு 1-45 மணி வரை முழுவதும் எரிந்து சாம்பலானது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் முழுவதாக எரிந்து நின்ற கார் உள்ள பரவி இருந்த தீயை அணைத்தனர்,
அதன் பிறகு வீட்டில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியே வந்தனர். கார் எரிந்த தீ விபத்தில் தரைத்தளம் முதல் இரண்டாம் தளம் வரை தீ பரவியதால் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியும் வீட்டின் முன் பக்கம் தீக்கரை படர்ந்தது,
மேலும் காரில் வைத்திருந்த 20000 பணம் மற்றும் விலை உயர்ந்த 2 செல்போன், வங்கி காசோலை புத்தகம் என அனைத்தும் எரிந்து நாசமானது.
அதைத்தொடர்ந்து கார் உரிமையாளர் தவமணி வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த அடிப்படையில் கார் எலக்ட்ரிக்கல் தீ விபத்தால் எரிந்து நாசமானதா, அல்லது யாராவது மர்ம நபர்களின் சதி வேலை திட்டமா என்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.