திருவள்ளூரில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்போம் தனிநபர் சுதந்திரத்தை காப்போம் என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், தலைமையில் உறுதி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது,
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் அவசர நிலை தேவைக்காக முன்பணம் வாங்குதல், நீண்ட மணி நேரங்கள் வேலை செய்யுமாறு நிர்பந்தப்படுத்துதல், குறைந்தபட்சம் ஊதியத்திற்கும் குறைவாகவே வழங்குதல், உடல் சார்ந்த வன்முறைக்கு உட்படுத்துதல், உதவ யாரும் இல்லாத உணர்வு உள்ளிட்ட கொத்தடிமை தொழில் முறைகளை களைய வேண்டும் எனவும் இவ்வாறு கொத்தடிமை தொழில் முறையை ஊக்குவிக்கும் தொழிலதிபர்கள் மீது கொத்தடிமை தொழில்முறை சட்ட விதிமுறைப்படி நடவடிக்கை எடுப்போம் எனவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது
இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் ஐ ஆர் சி டி எஸ் தொண்டு நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.