Close
பிப்ரவரி 23, 2025 8:04 மணி

திமுகவை எதிர்த்தவர்கள் டெபாசிட் கூட பெறவில்லை, இது மகத்தான வெற்றி : ஆர் எஸ் பாரதி..!

கூட்டத்தில் பேசிய எ.வ.வே.கம்பன்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் கழக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவருமான எ.வ.வே. கம்பன், தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன் கிரி தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் ;

தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக தலைவர் தலைமையில் நடைபெற்று வரும் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை மக்கள் அளித்துள்ளார்கள் எந்த பெரியாரை இழிவுபடுத்தலாம் என்று நினைத்தார்களோ அவர்களின் எண்ணங்களில் மண் விழக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றுள்ளது திமுகவை எதிர்த்தவர்கள் டெபாசிட் கூட பெறவில்லை இது மாபெரும் மகத்தான வெற்றி.

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் திமுக மகத்தான வெற்றியை குவித்து வருகிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு அசம்பாவித சம்பவங்களை எதிர்க்கட்சியினர் தேர்தல் யூகங்களாக கையில் எடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதும் திமுகவிற்கு மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளது என்பது தந்தை பெரியாருக்கு கிடைத்த வெற்றி .

தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசுபவர்கள் எவராக இருந்தாலும் அழிந்து போவதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவு ஒரு எடுத்துக்காட்டாகும்.

மேலும் தமிழ்நாட்டில் போதை பொருள் குறித்து குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றே பலர் உள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் ஆட்சியை பார்த்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளனர். கலைஞர் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் சார்பில் தமிழ்நாட்டில் விடப்பட்ட ரயில்களுக்கு நதிகளின் பெயர்களை வைத்தார்.

ஆனால் தற்போது மோடி அரசு தமிழ் நாட்டிற்கு எந்த ரயிலையும் விடாமல் வஞ்சித்து வருகிறது அப்படி ஒரு சில ரயில்களை விட்டிருந்தாலும் அதற்கு கூட ஹிந்தி மொழியிலேயே பெயர் சூட்டுவது வேதனைக்குரியது.

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பதோடு எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் ஆளும் முதல்வர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.

தற்போது 70 சுங்கச்சாவடிகள் உள்ளது அதன் மூலமாக 26 ஆயிரம் கோடி வரி வருகிறது ஆனால் மத்திய அரசு தமிழ்நாட்டில் 10 பைசா கூட கொடுக்காதது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.

இப்போது முதலே தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து வாக்காளர் பட்டியலை முறையாக சரி பார்த்து மீண்டும் திமுக வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என ஆர் எஸ் பாரதி பேசினார்

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் , மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய் ரங்கன், மாமன்ற உறுப்பினர்கள், அணி அமைப்பாளர்கள், கழகத் தொண்டர்கள்,  பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top