டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரம் வீரர்கள் தொடர்ந்து 8 தங்கம் , 5 வெள்ளி 2 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.
சர்வதேச அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி புதுடெல்லியில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் 5 வரை நடந்தது.
இதில், இந்தியா, இங்கிலாந்து, கஜகஸ்தான், பின்லாந்து, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
இதில், இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 61 நபர்கள் பங்கேற்றனர். இதில் காஞ்சிபுரம் ஓன்மேன் மார்ஷியல் கிக்பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் 9 வீரர் வீராங்கனையர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர்.
இறுதியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த குழுவினர் 8 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் என, மொத்தம் 17 பதக்கம் வென்றனர்.
அதில் , நீனா என்பவர் தங்கம் ஒரு வெள்ளி ஒரு வெண்கலம் எனவும், ரபிக் என்பவர் இரண்டு தங்கமும், சுபாஷ் , நிதீஷ், ரோகிணி ஆகியோர் ஓரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கமும் வென்றனர்.
காஞ்சிபுரத்திலிருந்து சென்ற அனைத்து நபர்களும் போட்டியில் பதக்கங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்று காஞ்சிபுரத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வரும் இவருக்கு காஞ்சிபுரம் வருகை தந்த போது பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்