காஞ்சிபுரத்தில், மாணவர்களுக்கான ‛காஞ்சி யூத் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் காஞ்சி வாரியர்ஸ் அணியும், காஞ்சி ராயல்ஸ் அணியும் மோதின.
இதில் காஞ்சி வாரியர்ஸ் அணியை சேர்ந்த இளையனார்வேலுார் கிராமத்தை மாணவர் ஹேமேஷ் குமார், காஞ்சி ராயல்ஸ் அணிக்கு எதிராக 82 பந்துகளில், 203 ரன்கள் குவித்து சாதனை புரிந்துள்ளார்.
இவர், ஏற்கனவே இத்தொடரில் ஒரு சதம் மற்றும் அரை சதம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்வாயிலாக ஆட்ட நாயகன் விருது பெற்ற ஹேமேஷ் குமார் கூறியதாவது:
கிரிக்கெட் பயிற்சியாளர் வினோத் கொடுத்த பயிற்சி மற்றும் ஊக்கத்தினால் 203 ரன் எடுக்க முடிந்தது. பயிற்சயாளருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இது போல் தொடர்ந்து நன்றாக விளையாடி இந்திய அணிக்காக விளையாடுவதுதான், தன் லட்சியம் அதற்காக கண்டிப்பாக கடுமையாக உழைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.