விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது ஆனாங்கூர் ஊராட்சி. ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் விவசாயம் செய்து வருகிறார், அவரது விவசாய நிலத்தில் மின்சார மெயின் லைன் ஒயர் பழுந்தடைந்திருப்பதை தமிழ்நாடு மின்வாரியத்திடம் பலமுறை புகார் கூறியுள்ளார்.
ஆனால் புகார் கூறியும், மின்சார வாரியம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை ரவி தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு இருந்தபோது மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி இரண்டு உழவுமாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டன.விவசாயி ரவி உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்சார வயர் பழுந்தடைந்திருப்பதை பலமுறை மின்சார துறையிடம் முறையிட்டும் பயன் இல்லை என்பதாலும், மின்வாரியத்தின் அலட்சியத்தால் இரண்டு மாடுகள் உயிரிழந்ததாலும் அப்பகுதி பொதுமக்கள் கோபம் அடைந்துள்ளனர்.
இதனால் மின்சார வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாடுகள் உயிரிழப்பு, விவசாயி பலத்த காயம்
