Close
பிப்ரவரி 23, 2025 11:16 காலை

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  ஆண்டு விழா

புதுக்கோட்டை

சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் பரிசளிக்கிறா்ர் கவிஞர் தங்கம்மூர்த்தி

புதுக்கோட்டையில்  உள்ள சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியர்  சு. சுசரிதா தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் மு.பரமசிவம்  வரவேற்றார்.தமிழாசிரியர் சு.சுமதி  ஆண்டறிக்கை வாசித்தார்.

 புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் சாதனை பெற்ற (டாப் ரேங்க்) பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி சஹானா, (மல்டி டேலண்ட்) பத்தாம் வகுப்பு மாணவி ஸ்ரீ நவ்யா ஆகிய இருவருக்கும் விருதும் மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற  செஸ்,ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி   பெற்ற   100 க்கும் மேற்பட்ட   மாணவிகளுக்கும்  பரிசுகள் நற்சான்றுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

புதுக்கோட்டை
சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில்

நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி   100% தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார். மாணவிகளின் பரதநாட்டியம், குழு நடனம்  நடைபெற்றது. விழாவில் மாமன்ற உறுப்பினர் பாரதி சின்னையா  மற்றும்  பெற்றோர்கள், ஆசிரியைகள்,  மாணவிகள்  திரளாகக்    கலந்து கொண்டனர். ஆசிரியை மு கீதா .நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் நிறைவாக  ஆசிரியை கிருஷ்ணவேணி நன்றிகூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top